சனி, 13 பிப்ரவரி, 2016

மழை!!!

மோகம் தீர்த்துக் கொள்கிறதோ என்னவோ..
மண்ணை விடாமல் 
முத்தமிட்டு!!!

-வி.பாலா 

வேண்டும் எனக்கு

கண்விழி இரண்டில்
கரைந்திட வேண்டும்.

காதோரம் அரங்கேறும்
காதணிகளின்
கலைநயத்தை
கண்டிட வேண்டும்.

இதழ்கள் சொரியும்
தேன் பருகிட வேண்டும்.

கன்னம் மேவிய
சதையை
கவ்வி ருசித்திட வேண்டும்.

கால் கொலுசுகளின்
காதல் மொழியை
கேட்டிட வேண்டும்.

உன் அணுத்துகள்
ஒவ்வொன்றையும்
ரசித்திட வேண்டும்.

ஒருமுறை அல்ல,
ஓராயிரம் முறை.



சம்சாரம், மின்சாரம்

என்னதான்
உள்ளது உன்னில்?

செல் வழியில்
வந்த உன் குரலோசையில்
குதுகலிக்கிறது மணம்
குழந்தையாய்.

சிலிர்க்கிறது தேகம்
சின்னச் சின்ன உன்
சிணுங்கள் கேட்டு,

ரோமங்கள் கூசுகிறது
கிசுகிசுக்கும்
உன் கேள்விகளால்,

'போடா போடா'
என அருகில் வரச்
சொல்கிறாய்,

பிரிவை தாங்காமல்
பிள்ளை போல்
பிதற்றுகிறாய்.

முதல் மகன் நான் என,
மழழை மொழி
பேசுகிறாய்.

காமத்தீ மூட்டிக்
காதல் கணைக்கிறாய்
காதுக்குள்.

மோகம் கொண்டு
முத்தமழை பொழிகிறாய்.

எதார்த்தமாகவா
பேசுகிறாய்?
என்னென்னவோ
மாற்றம் என்னில்.

உன் அன்பின் அணைப்பில்
ஆகாயம் தாண்டி
பால்வெளியில்
பறக்கிறேன்.

ஆயுளுக்கும்
அரவணைத்திரு
இன்னோரு அன்னைபோல்.




  

நீ வேண்டும் எனக்கு

விடியற்காலை விரல்களால்
விளையாடிடவும்,

தேநீர் தரும் வேளையில்,
தேகம் சிலிர்க்கும் வண்ணம்
தாவி அணைத்திடவும்,

குளிக்கச் செல்லும்முன்
குழந்தையாய் அடம்பிடித்து,
கூட அழைக்கும்போதும்,

குளித்தபின் துண்டை விடுத்து,
துவட்ட உன் சேலை
முந்தானையை  
முறுக்கி இழுக்கும்போதும்,

சமயலறையில் சப்தமின்றி
உன் பின்னால் வந்து
சல்லாபிக்கவும்,

சமையல் முடிந்தது, முடிந்தது என்று
மூச்சு முட்ட
முத்தமிடவும்,

ருசி பார்க்க என
நீ ஊட்டி விடுகையில்,
வலிக்காமல் உன் பிஞ்சு
விரல்கள் கடித்திடவும்,

அவசரமாக அலுவலகம்
கிளம்பும் வேளையில்
அன்பாய் ஒரு முத்தமிடவும்,

மனதை உன்னிடம் வைத்து
மதிய உணவை திறக்கையில்
மயங்கிடவும்,

சோர்ந்து வீடு திரும்பும்போது,
மல்லிகை போல் பூத்த
உன் பொன் சிரிப்பை காணவும்,

சிற்றுண்டி கொடுக்கையில்
சில பல விசயங்களோடு,
விசமங்கள் பண்ணவும்,

எல்லா வேலைகளுக்கிடையிலும்,
என்னையே ரசிக்கும்
உன்னை ரசிக்கவும்,

இரவு ஒன்றாய் உண்டு,
ஊர் கதை பேசி செல்லமாய்
ஊடல் கொள்ளவும்,

ஊடலின் முடிவாய்
சண்டையிட்டு தினமும்
கூடல் கொள்வதுமாய்
வேண்டுமடி நீ எனக்கு....




திங்கள், 8 பிப்ரவரி, 2016

கவியின் வார்த்தை

இன்பத்தின் சாரால்,
இதயத்தின் ஓரம்.

இன்னொருவரின்
இயலாமையினால்
இன்றெனக்கு கிடைத்தது
இலக்கணச் சுத்தம்
இல்லாததால்.

இறுக்கமாய்
இசைந்தார்
இமயமாய் கவியில்
இன்று போற்றப்படும்
இன்னமுதத் தமிழ்ச் சிற்பி.
"இவரது கவிதைகூட
இதற்கு மேல்" என்று.

இவ்வார்த்தைகளின் சுமை
இவன் தாங்க இயலுமா?
இச்சொல் கேட்க எத்துனைபேர்
இளமை முதல்
இன்னுமும் ஏங்கி,
இருமடல் குவித்து
இருக்கின்றார்? - உம்
இரு இதழ் கவிக்காக!

இமை பிறழ்ந்தாலும்
இடித்துரைப்பீர் தவறென.
இது நிரந்தரமன்று,

-வி. பாலா /-