வியாழன், 21 ஜனவரி, 2010

எமது எதிர்நோக்குதல்

நடமாடும் மனிதன் ........
நல் வாழ்வு வாழ....
நாகரீக உலகில் ..
நட்பினை நயவஞ்சகமாக...
நாளும் வளர்ப்பவர் மத்தியில்
நான் சிறிது மாறுதலுடன்....... உம் நட்பை எதிர் நோக்கி ...........

புதன், 20 ஜனவரி, 2010

ஆசைக்கு ஆணை இடு


உன் உயிர் போனாலும் போகட்டும்
உற்றவள் வரும் வரை
மற்றவளை நோக்கிப் போகதே
மானம் போவதுடன்
மன அமைதியும் குலையும் நண்பா...

திங்கள், 11 ஜனவரி, 2010

மரத்தின் கேள்வி

மண்ணில் மனிதா
நீ வாழ உன் மாசை
மறு சுழற்சி செய்திடுவேனே
நான்........

உன் விஷம் உண்டு
உனக்கு உணவிட்டேன்
உன் தலைமுறை செழிக்க
உருகொண்ட நாட்கொண்டு .....

நீ பக்குவமாய்
பதார்த்தத்தை
சமைத்துண்ண
இழந்திட்டேன் என் உடலை
உனக்காக .....

இருப்பினும்
உன் இழி செய்கையால்
எம் இனத்தை எல்லாம்
அழிக்கிறாய்..... ஏனடா?

நாங்கள் இன்றி
வாழ்ந்திடுவாய் என்ற
இறுமாப்பா..... ?

உன் வாழ்வினிக்க
உணர்வுள்ள நானும்
உயிர் வாழ வேண்டுமடா....

உலகம் உயிர் வாழ
நாங்கள் வேண்டாமா ?
கேளடா உன் அறிவியலை

உமக்காக நாங்களா?
எமக்காக நீங்களா ?

இன்றைய இளைஞர்

எதோ ஒன்றை நோக்கிப்
பழகிடும் நட்பு.......
இச்சை தீர்த்திட
இனித்துப் பழகிடும் காதல்....
ஆபத்து எனில் ஓடிடுவான்
ஆலயம் நோக்கி ......
ஏன் இந்த உண்மை இல்லா
வாழ்வு உமக்கு என் தோழா......

காமம்

கட்டற்ற கற்றாய்
கலந்திடில் கொடிது காமம்...
கட்டுண்டு கலந்திடில்
காத்திடும் காமம் நமையே ......

இன்றைய காதல்

உள்ளம் புணர்ந்த காதல்
உருண்டோடி,
உருமாறி,
உயிர் பிழைத்தது.
உடல்கள் மட்டும் புணரும்
வடிகாலாய் ......

நண்பர் பிரிவு

வறண்ட கோடையிலும்
தேங்கிய குளங்கள்
நண்பர்கள் பிரிவால் கண்ணீர்.........

நட்பு

உடைந்த உண்டியலாய்
கலகலப்பு -ஆங்கே
நண்பர் கூட்டம்.... 

லேபிள்கள்:

பாரதியின் வேண்டுதல்....... யான் வேண்டுவதும் இதுவே

©Úv ¾Öv ÷Ásk®

ÁõUQÛ÷» °Ûø© ÷Ásk®

{øÚÄ |À»x ÷Ásk®

ö|¸[QÚ ö£õ¸Ò øP¨£h ÷Ásk®

PÚÄ ö©´¨£h ÷Ásk®

øPÁ\©õÁx ÂøµÂÀ ÷Ásk®

uÚ• ªß£•® ÷Ásk®

uµo°÷» ö£¸ø© ÷Ásk®

Ps vÓ¢vh ÷Ásk®

Põ›¯zv¾Öv ÷Ásk®

ö£s Âkuø» ÷Ásk®

ö£›¯ PhÄÒ PõUP ÷Ásk®

©s £¯ÝÓ ÷Ásk®

ÁõÚPª[S öuߣh ÷Ásk®

Esø© {ßÔh ÷Ásk®

இளையராஜாவை பற்றிய எமது சிறு கருத்து

இறைச்சலுடன் வாழ்ந்த
உயிர்கட்கு இசை அமுது
ஊட்டிய........................ தாய்