சனி, 13 பிப்ரவரி, 2016

சம்சாரம், மின்சாரம்

என்னதான்
உள்ளது உன்னில்?

செல் வழியில்
வந்த உன் குரலோசையில்
குதுகலிக்கிறது மணம்
குழந்தையாய்.

சிலிர்க்கிறது தேகம்
சின்னச் சின்ன உன்
சிணுங்கள் கேட்டு,

ரோமங்கள் கூசுகிறது
கிசுகிசுக்கும்
உன் கேள்விகளால்,

'போடா போடா'
என அருகில் வரச்
சொல்கிறாய்,

பிரிவை தாங்காமல்
பிள்ளை போல்
பிதற்றுகிறாய்.

முதல் மகன் நான் என,
மழழை மொழி
பேசுகிறாய்.

காமத்தீ மூட்டிக்
காதல் கணைக்கிறாய்
காதுக்குள்.

மோகம் கொண்டு
முத்தமழை பொழிகிறாய்.

எதார்த்தமாகவா
பேசுகிறாய்?
என்னென்னவோ
மாற்றம் என்னில்.

உன் அன்பின் அணைப்பில்
ஆகாயம் தாண்டி
பால்வெளியில்
பறக்கிறேன்.

ஆயுளுக்கும்
அரவணைத்திரு
இன்னோரு அன்னைபோல்.




  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு