வியாழன், 17 செப்டம்பர், 2015

பிறந்தநாள் வாழ்த்து.... என் தலைவனுக்கு...

தலை வணங்குகிறேன் உமக்கு..
தலைவர் நீர் என்பதில் 
தலைக்கனம் எமக்கு...
தரணியில் 
தாய்நாட்டை 
தகுதி உயர்த்திட்ட
தயாளனே....
தன்னலமில்லா தியாகியே....
தனி ஒரு அரசனாய் வாழ்க நீர்... எந்நாளும்...

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

குமுறல் மிச்சம்

ஒவ்வொருவருக்கும் உண்டு 
தேசப்பற்று, உள்ளத்தில் மட்டும். 
ஒருங்கிணைக்க வருபவர்கள்
உளிகளாய் இல்லாமல்,
பணம் பெருக்கும் முதலைகளாய் ஆவதால்
குமுறல்களே மிச்சம்......

எச்சமும், மிச்சமும்

வெளிநாட்டினரின் எச்சத்தையும்,
தன் வாழ்வின் கடைசி மிச்சத்தையும் தேசத்தில்
கொண்டாடும் மக்கள்தேசம்

என்ன தான் பிரச்சனை.......?

படித்தும் முட்டாளாய்
பலர் இருக்கும் தேசம்..?
பந்தாவாய் பன்னாட்டு நிறுவனத்தில்
அடிமை பணிக்கு ஏங்கிக் கொண்டு...
சிறு சிறு தொழில்களை தொடங்குவோம்
சிகரத்தை நோக்கி பயணிப்போம்..

செவ்வாய், 8 செப்டம்பர், 2015

செல்போன்

சிந்தையை சிதறடிக்கச் செய்யும்
சிறு கருவி .
சிறார் முதல் வயோதிகர் வரை