திங்கள், 31 டிசம்பர், 2012

மலரும் ஆண்டு

புதிதாய் சிந்தனை
பூக்க வேண்டும்.

பூமியில் அமைதி
பொங்க வேண்டும்.

பொன்நகை தவிர்த்த
புன்னகை வேண்டும்.

நட்கடந்த பிரச்சனையும்
நளினமாய் பேசி தீர்த்திட வேண்டும்.

புத்தாண்டு புலர வேண்டும்
மொட்டவிழும் பூவாய்......
                                                              - வி. பாலா /-

சனி, 15 டிசம்பர், 2012

இன்றைய இளைஞனின் இடையூறுகள்...

கண்ணீராய் கருவித்து,
கதறி மண்ணில் காலுன்றி,

தரணியில் நிலைக்க
தாய்ப்பால் இன்றி,
தறிகெட்ட தண்ணிப்பால்  அருந்தி,

அறுசுவை உணவு வேண்டி
அடுததவரை எய்துண்டு,

கல்வி பயில பள்ளி சென்று
கள்ளத்தனம் பழகிக் கொண்டு,

அறிவு போதிக்கும்
ஆசானை இழித்து,

அன்பு கட்டிடும்
அன்னையை எதிர்த்து,

தன்னம்பிக்கை ஊட்டிடும்
தகப்பன் கனவை தகர்த்து,

நட்பு பராட்டிடும்
நண்பனையும் நாறடித்து,

படிப்பு அறிவில்லாமல்
பள்ளி வாழ்வை முடித்து 

கனவுகளுடனும்
கற்பனையுடனும்
காசினை இரைத்து
கல்லூரிக்குள் நுழைந்து,

கன்னி மணம் காணாதவன்
கன்னியின் கண்ணியில்
கவிழ்ந்து
காதல் எது?
காமம் எது? என்று
கவலையில்
குழம்பி,

காதல் என்று- தன்
கருத்தைக்
கன்னியிடம்
கலந்து கொண்டு
கலங்கி
கவலையில் ஆழ்ந்து,

தாடி வளர்த்து
தம்பியிடம் தகராறு செய்து
தம் அடித்து
தகாத பழக்கம் கொண்டு
தரணியின் வசம் வெறுத்து,

தீய பழகத்தினின்று
தீண்டாமை காக்க
தீர்க்க தரிசனம் பெற்று,

தன் வாழ்வின் நோக்கம் தேடி
தனிமை விரும்பி
தன் நாட்டின் மதிப்பை
தரணியில் உயர்த்த
தானும் முயல வேண்டுமென்று,

தன்னம்பிக்கை கொண்டு
தானும் உழைக்கத்
தயாராக இருக்கும் போது
தன் தாயிடம் இருந்து வந்தது
அந்த அறைகூவல்
அடுத்த வேளை உணவுக்கு
அரிசி வேண்டுமென்று......
                                                                - வி. பாலா /-