சனி, 11 பிப்ரவரி, 2012

காதல்

காதல் அவஸ்தை 
அது புரியாத புதிராய் இருக்கும்போது...

காதல் ஆன்மீகம் 
அது அடை காத்திடும்போது,

காதல் தொல்லை 
அதைத் தொலைத்திடும்போது ,

காதல் தொழுகை 
அதைத் தழுவிடும்போது,

காதல் தொலைவு 
அதன் பாதையை மறந்திடும் போது,

காதல் இமயம் 
அதில் இரு இதயம் பரிமாறும் போது,

காதல் தடங்கல் 
அதைத் தடையாய் நினைத்தால்,

காதல் சந்தோசம் 
அதை சரியாய் தெரிந்திருந்தால் ..  
                                                                          - வி. பாலா /-


வியாழன், 9 பிப்ரவரி, 2012

உறங்கிடு உண்மையாய்


நாளைய உலகம் உன் கையில் என்று 
இன்றைய தலைவர் மார் தட்டுகிறார்.
இன்னும் அவர்கள் அறியார் போலும் 
நீ உன் சிற்றின்பதிலே கழிக்கிறாய் 
கனப் பொழுதுகளை.....  

கனவு காண்கின்றார் உன்னை எண்ணி 
இன்றைய மாண்புமிகுக்கள் பலர், 
மாணவர் இருகின்றார் என்று....
மடையர்கள் நீ மட்டை பந்து 
விளையாடவும் பார்க்கவுமே 
மணித்துளிகள் போதவில்லை என்பது அறியாமல்...

விண்ணை வெற்றி கொள்வான் எம் 
வீரன் என்று விவாதம் செய்கின்றனர் 
விஞ்ஞானிகள் வெளிநாடுகளில் 
விளம்பர மடல்களை ரசித்திடவே 
வினாடிகள் போதாமல் நீ விசும்புது அறியாமல்...

சிறு சிறு கோள்களிலும் உன் கால் பதிப்பாய் என்று
சிந்தனை செய்தே சீறுகின்றனர் சிந்தனையாளர் பலர், 
சினிமா தியட்டரில் கால் வைப்பதே உனக்கு 
சிரமமாய் இருபது தெரியாமல்... 

நேரமும் நாட்களும் கழிகிறது,
கண் திறந்தே உறங்கியது போதும் நீ
உன் கனவைக் காணவாவது
கம்பீரமாய் - உண்மையாய் உறங்கு.
உண்மை உன்னிலே உறங்காமல்..
                                                                                           - வி. பாலா /-




  

தடமாற்றம் ஏன்?

தோழி, 
தன் தரம் உயர்த்த
தாயைப் பலிப்பயோ நீ?
என் தமிழை மட்டும் 
தரம் தாழ்த்த நினைகிறாய்?
                                                                        - வி. பாலா /-

புதன், 8 பிப்ரவரி, 2012

மாறாத மனம் கொண்ட மங்கை

மலரே 
உன் போன்று உண்மையாய் 
ஒளிவின்றி சிரித்திட 
இம்மண்ணில் இன்று வரை 
மங்கை எவரும் உண்டோ? 


இளைஞனின் ஒரு சொல்....

நாட்டினை 
பூந்தொட்டியாய் மாற்றிட 
உங்கள் வீட்டு 
குப்பை தொட்டியாய் நாங்கள்...

திங்கள், 6 பிப்ரவரி, 2012

என்று நாம்?

நான் என்பது நானாய் 
இருந்தது நேற்று...
நான் என்பது நீயாய் 
ஆனது இன்று..
நான் என்பது நாமாய்
ஆவது என்று?