திங்கள், 6 டிசம்பர், 2010

மதி மயக்கிய மலரின் தாக்கம்

மலரே,
மென்மையாம் பெண்மை கொண்டு
வன்மையா தீண்டியதேன் எனை?

மலரே,
கூடிவாழ்ந்திட வேண்டின்
கோடிசெதிடுவேன் ஏதும் இங்கு,

மலரே,
அம்மாவைக் காரணித்து,
அநீதியா வதைத்திடாதே எனை.

மலரே,
ஜென்மம் நூறு வேண்டும் வாழவென்று,
ஜாலம் செதிடாதே நீ,

மலரே,
மாலையில் வாடும் பூவோ,
மனத்தைப் பாதித்த நீயும்.

மலரே,
காலையில் கலகலத்த நீ,
கதிரவன் மறைந்திடின் கானல் நீரானாயே ஏன்?

மலரே,
மாதம் பல கழிந்து சேர்ந்தா,
மகிழ்ந்திடும் முன் மறைந்ததேனோ?

மலரே,
விடாமல் பேசியே நின்ற நீ,
விட்டுக் கொடுத்துப் பேசுவதேனோ இன்று?

மலரே,
காதல் மொழி பேசவில்லை,
காரணம் அதை நாம் உணர்ந்தாலோ என்னவோ?

மலரே,
கூடித் திரியவில்லை, என்
குடும்பத் தலைவி நீ என்பதால் நான்.


மலரே,
தெவத்தின் முடிவு வேண்டுமென்றா,
தெவமே இல்லை என்பானிடம்.

மலரே,
பூ கேட்க வேண்டுமென்றா,
பூமியைப் போல் பொறுத்திருக்கிறேன் நானும்.

மலரே,
என் மேல் இல்லா நம்பிக்கை,
எங்குமில்லா இறை மேல் ஏனோ?

மலரே,
காதல் கசக்குமென்பார் பலர்,
கசக்கி விட்டது எனை இன்று ஏனோ?

மலரே,
ஒன்றுமே நிகழ்ந்திடவில்லை நம்மில்,
ஒதுக்கி விட நினைத்தாயோ அதனால்?

மலரே,
வாடமல் பாதுகாக்க வேண்டுமென நினைந்தேன்
வார்த்தையால் பதறடிக்கிறாயே எனை.

மலரே,
சிரிக்க வைத்து ரசிக்க எண்ணினேன்,
சீரழித்து விடுவாயோ எனை?

மலரே,
கேள்விகள் கேட்கக்கூடாதென நினைந்தேன்,
கேட்காமல் போவிடுவா போலிருக்கிறதே,

மலரே,
முட்போல் அரணாக வேண்டுமென நினைந்தேன்,
முட்டாளாக்கி விடுவாயோ நீ.

மலரே,
குடும்பத் தலைவி நீ என்று நினைந்தேன்,
குடும்பத்தை காட்டிப் பிரிந்திடுவாயோ,

மலரே,
மகிழ்ச்சியா வாழ வேண்டுமென்று நினைந்தேன்,
மணவோலை அனுப்பிடுவாயோ நீ.

மலரே,
சந்தோஷம் நம் பிள்ளையாகுமென நினைந்தேன்,
சாதியைக் காட்டிப் பிழையாக்கிடுவாயோ,

மலரே,
அன்பை அகத்தில் வைத்து,
அவமதிப்பை இதழில் வைத்தாயே ஏன்?

மலரே,
மறுமுறை உனை காண்பேனோ என்றபோது,
மறித்தாலும் உனை மறவேன் என்றவளோ நீ?

மலரே,
பேசினோமே காலமறியாமல்,
பேசுவதற்கும் காலம் கேட்கிறாயே ஏனடி?

மலரே,
சிரித்துப் பேசுவாயே நீ என்றும்,
சிதைக்க முடியா வலியை மறைத்து ஏனடி?

மலரே,
விட்டுச் சென்றா என்று மறைத்திருந்தேன்,
விடேன் என்று வந்த வண்ணம் விலகுவதேனடி?

மலரே,
அடக்க இயலாமல் அடுக்கிப் பேசுபவளே,
அன்பாக்கூட பேசேன் என்றாயே ஏனடி?

மலரே,
எதுமறியாமல் என்றுமே பேசுவோம் என்றாயே,
என்ன உறவடி நமக்குள்.

மலரே,
மகன் வேண்டுமென்று வெட்கிப் புன்னகைத்தாயே,
மண்ணாப் போனதோ அந்த எண்ணம் உனக்கு.

மலரே,
மற்றவரைப் பகைத்திடுவாயே பயமின்றி,
மனத்திலிருந்து சோல்லடி நானும் அங்ஙனமோ?
  
மலரே,
மகிழ்வது போல் மற்றாரிடத்துக் காட்டி,
மனத்தில் ரணம் அனுபவித்திடுகிறாயோ?

மலரே,
சரியா பேசுவதா நினைந்து,
சரிந்து விடுவாயோ ஏனடி?

மலரே,
மடி சாந்திட மையம் கொண்டவனை,
மாத்திடாயோ உன் இடி வார்த்தைகளால்.

மலரே,
உறுதியா உரைக்கின்றேன் எனையன்றி
உன் கணவன் எவனானாலும் உண்மையா வாழ்ந்திடா நீ?

மலரே,
நான் வாழ்கின்ற மனமது,
நானன்றி எவன் வாழ இயலுமங்கு.

மலரே,
வார்த்தையால் சமாளித்திடுகின்றா. நான் சோல்வேன்,
வாழ இயலாது உன்னால் நானின்றி அன்பே.

மலரே,
கோபப் படுகிறா பிரிவேனென்று. நான் அறிவேன்,
கோபத்தினாலும் நான் விலகேன் உனை விடுத்து,

மலரே,
வார்த்தைகள் கோர்த்து வசித்திட முடியும் உனை,
வாழ்க்கையை நீ உணர வேண்டுமென்பதாலே விட்டேன் உன் போக்கில் நானும்.


-    வி. பாலா/- 

கல்லூரி நட்பு

மூன்றாண்டுகள் பழகினாலும்,
முகம் மறவா உன் நட்பை,
முனகிக் கொண்டிருப்பேன்,

முடியாத வயதிலும்,

முதிர்ந்த உன் நண்பனாய்.