வெள்ளி, 27 ஜூலை, 2012

காதலி

மேலும் படிக்க »

புதன், 25 ஜூலை, 2012

பண நாயகம்

படிப்பு,
பட்டம்,
பகுத்தறிவு,
எனப் பல திறமை உண்டு
பாமரனுக்கும்.

சட்டம் செய்தவனும்,
திட்டம் போட்டவனும்,
பாமரனே அன்று!

காந்தி கொண்ட விடுதலை
கடை கோடி இந்தியனுக்கும்
சொந்தமே.

பாசம் வைத்துப் படையென வந்தவன் அவன்,
தன் நாடென்று.

நேசம் கொண்டு உழைத்தவன் அவன்
என் மக்கள் உண்ண  வேண்டும் என்று .

வியர்வை சிந்தியவன் அவன்
விடியலுக்காக,

விடிந்தது- அவனுக்கல்ல 
எவன் கையில் 
காந்தி இருந்தாரோ 
அவனுக்கு மட்டும். 

காந்தியைக் காட்டி
படை திரட்டியவர்கள், இன்று
காந்தி நோட்டைக் கட்டி
வாக்கு திரட்டுகிறார்கள்.

பாவம் இவன் அறியான்
இவன் (தன் வாக்கின் ) பலம்.
பணத்துக்கு விலை போவானோ அறிந்தால்
தன்  மானம் விடுத்து

மேல் தட்டு மக்களின் 
சுக போகங்களுக்காக தன்
சுயத்தை இழந்து தவிக்கும்
மக்கள் ஏராளம்...

குற்றவாளி என்று தெரிந்தும்
தன் தலைவனுக்காக கோவில்
கட்டத் துடிக்கும் துதிபாடிகள்
இருக்கும் வரை பாமரன்
என்றும் பாமரனே...

அடுத்த வேலை கஞ்சிக்கு
அயராது உழைக்கும்
உழவன் மத்தியில்...
ஊற்றியும் - கூட்டியும்
கொடுக்கும் கயவர்கள்
உள்ளவரை, உழவனும் பாமரனே..

பணம் மட்டுமே பேசும் நாட்டில்
பாமரன் அங்கே ஊமை
என்பது எவ்வளவு உண்மை...

                                                                       - வி. பாலா /-